நீருக்குள் பிரசவம்...
நீருக்குள் பிரசவம்...
===================
- திருக்குர்ஆனின் அதிசயிக்க வைக்கும் முன்னறிவிப்பு!
மர்யம் (அலை) அவர்கள் பிரசவ வலியால் துடித்த போது, அவர்களுக்கு கீழே ஓர் ஊற்றை இறைவன் ஏற்படுத்தியதாக திருக்குர்ஆனின் 19:23,24 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَىٰ جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًا مَّنسِيًّا
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 19:23
فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا
"கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
திருக்குர்ஆன் 19:24

நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து இதில் கூறப்படுகிறது.
இன்றைய அறிவியல் உலகம் இப் போது இதைக் கண்டு பிடித்துள்ளது.
பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இந்தியாவிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தைத் தரும் என நம்பப்படுகிறது.
ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது.
நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்குப் பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தை கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது.
எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் கூடுகிறது.
ரஷ்யாவில் பிரசவ மருத்துவ மனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.
திருக்குர்ஆனின் முன்னறிவிப்பை
தற்போதைய மருத்துவ ஆய்வுகள் உண்மைப்படுத்துகின்றன.
அல்ஹம்துலில்லாஹ்...