Posts

நீருக்குள் பிரசவம்...

நீருக்குள் பிரசவம்... =================== - திருக்குர்ஆனின் அதிசயிக்க வைக்கும் முன்னறிவிப்பு! மர்யம் (அலை) அவர்கள் பிரசவ வலியால் துடித்த போது, அவர்களுக்கு கீழே ஓர் ஊற்றை இறைவன் ஏற்படுத்தியதாக திருக்குர்ஆனின் 19:23,24 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَىٰ جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًا مَّنسِيًّا பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். திருக்குர்ஆன்  19:23 فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّ ا "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். திருக்குர்ஆன்  19:24 நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து இதில் கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப் போது இதைக் கண்டு பிடித்துள்ளது. பிரசவம் ந...

கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

Image
கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் "பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்'' என்று கூறப்படுகிறது. இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப்பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் காலகட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்கள் கழிந்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து அவற்றுக்கு உரிய வடிவம் உருவாகும். இதைத்தான் "பின்னர் வேறுபடைப்பாக மாற்றினோம்" என்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. மிகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது அது இறைவனின் வார்த்தை என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

Image
இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு இவ்வசனத்தில் (70:4) ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது. நாட்கள் என்பது ஒருவரின் பயண வேகத்தைப் பொருத்து மாறுபடும் என்பதை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்துக் கூறுவதற்கு முன், நாட்கள் என்பது மாறவே மாறாது என்பதுதான் உலக மக்களின் நம்பிக்கையாக இருந்தது. உதாரணமாக இந்தப் பூமியிலிருந்து 25 வயதுடைய ஒருவன் ஒளி வேகத்தில் மேல்நோக்கிப் பயணம் செய்து கொண்டே இருக்கிறான். (ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் 3,00,000 - மூன்று லட்சம் - கி.மீ). பூமியில் ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகு அவன் திரும்பி வந்தால், அவனுடைய வயதுடையவர்கள் பலர் இறந்திருப்பார்கள். எஞ்சியிருப்பவர்கள் 75 வயதுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒளி வேகத்தில் பயணம் செய்து கொண்டே இருந்தவன் 25 வயது வாலிபனாகவே திரும்பி வருவான். இது இன்றைய நவீன உலகில் வாழும் மேதைகளில் பலருக்கே புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண...

குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை

Image
குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அனைத்தும் ஒரே பொருளாக இருந்தது; அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது. அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் 41:11 வசனம் கூறுகின்றது. இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத்தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனோ இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும், இன்னபிற கோள்களாகவும், துணைக்கோள்களாகவும், கோடானுகோடி விண்மீன்களாகவும் உருவாயின. இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியு...

புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

Image
புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக இறைவன் ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சூரியனை ஒரு ரங்கராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை. குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும்போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தருவதாகவும் இருக்கும். பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. 'தொட்டிலாக' என்ற சொல் மூலம் இதைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். மாபெரும் அறிவியல் உண்மையை உள்ளடக்கி இவ்வசனம் இறைவனின் வார்த்தையே என்பதற்கான சான்றாக அமைகின்றது. சத்தியத்தை ஏற்காத எங்களது முன்னோர்கள் நரகவாசிகளா?...

பூமிக்கு முளைகளாக மலைகள்

Image
பூமிக்கு முளைகளாக மலைகள் பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று இவ்வசனங்களில் (15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் வசனங்கள். =================  وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَّوْزُونٍ  பூமியை விரித்தோம். அதில் முளைகளை நாட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம். திருக்குர்ஆன்  15:19  وَعَلَامَاتٍ ۚ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர். திருக்குர்ஆன்  16:16  وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழ...

வானத்திற்கும் தூண்கள் உண்டு

Image
வானத்திற்கும் தூண்கள் உண்டு இவ்வசனங்களில் (13:2, 31:10, 22:65) நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்தான் எனக் கூறப்படுகிறது. "வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளை உங்களால் பார்க்க முடியாது'' என்ற கருத்தில் இவ்வசனங்கள் அமைந்துள்ளன. பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்புவிசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம். உதாரணமாக நாம் வாழ்கின்ற பூமி, மணிக்கு 1670 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றுகிறது. அதே சமயம் சூரியனை, மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றது. இவ்வளவு வேகமாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் பூமி சுற்றும் பொழுது அதை ஈர்த்துப் பிடிக்கும் ஒரு சக்தி இல்லாவிட்டால் தனது நீள்வட்டப் பாதையிலிருந்து இப்பூமி தூக்கி வீசப்பட்டு விடும். பூமியின் எடை (நிறை) 6,000,000,000,...